வெள்ளரிக்காய் பால் கூட்டு / Cucumber koottu :
கூட்டு என்றாலே மிதனமான சுவையுடனயது, வயிற்றுக்கு இதமாக காரம், உப்பு, மிளகாய் எல்லாம் லேசாக சேர்த்துக்கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல சுவையான காய்வகை. குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு, சிறிது நெய் கலந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.வெள்ளரிக்காய்க்கு ஒரு நல்ல மணமுண்டு, அப்படியே பச்சையாக சாப்பிட இன்னும் நல்லது, மென்று உண்ண முடியாதவர்கள் இது போன்று கூட்டு செய்து சாப்பிடலாம். வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய் புளிக்குழம்பும் வெள்ளரிக்காய் கூட்டும் அற்புதம் சமைத்து சுவைத்துப்பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய்-200 கிராம்
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு வேகவைத்தது-1/2 கோப்பை
உப்பு-1/2 தே .க
மஞ்சள்தூள்-1/4 தே.க
பால்-1/4 கோப்பை
அரைக்கத்தேவையான பொருட்கள்:
தேங்காய்-1 மேஜைக்கரண்டி
சீரகம்-1 தே.க பச்சை மிளகாய்-3 அல்லது 4
சின்ன வெங்காயம்-4
தாளிக்க:
எண்ணெய் -2 தே க
கடுகு-1/2 தே க
கறிவேப்பிலை
செய்முறை:
1.பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.வெள்ளரிக்காயை சிறியதாக நறுக்கி 1/4 கோப்பை பால் விட்டு வேகவைக்கவும்.
3.மேற்கூறிய அரைக்க பொருட்களை, நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
4.பருப்பு, வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக்கொதிக்கவிடவும், நன்கு கொதித்து வரும் பொது அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.