கத்திரிக்காய் தொவையல் / Brinjal chutney
கத்திரிக்காய் தொவையல்:
கத்திரிக்காய் தொவையல் மிகவும் சுலபமானது, சுவையானதும் கூட. சுவைத்துப்பாருங்கள் அதன் அருமை புரியும். தினம் காலையில் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்பது ஒரு குழப்பமான, விடை அறியாத கேள்வியாக இருக்கும். தொட்டுக்கொள்ள சட்னி சுவையாக இருந்தால் இட்லி, தோசை போல ஒரு அற்புதமான பலகாரம் வேறொன்றும் உண்டோ? இதை செய்துபரிமாருங்கள், யாராலும் இதன் மூலப்பொருள்யாதென்று கண்டறிய இயலாது.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் -2
வெங்காயம்-1
தக்காளி சிறியது-1
பச்சைமிளகாய்-5
உப்பு-1 தே .க
புளி -சிறிய நெல்லிக்கனி அளவு
தேங்காய்-3,4 கீற்று
தளிக்க:
எண்ணெய் -2 தே .க
கடுகு-1 தே .க
உளுத்தம்பருப்பு -1 தே .க
பெரும்காயம்-1/4 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
கத்திரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் தோல் உரித்து நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
பிறகு கத்திரிக்காய் சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கத்திரிக்காய் பாதி வெந்ததும், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
உப்பு, புளி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
சுவையான கத்திரிக்காய் தொவையல் ரெடி.