அதிரசம் / Adhirasam

அதிரசம்:

For English recipe please click:    http://wp.me/p1o34t-kW
தீபாவளி என்றாலே முன் நிற்பது முக்கியமான மூன்று விஷயங்கள் புத்தாடை, பட்டாசு, மற்றொன்று பலகாரம்.
குறிப்பாக இனிப்பு பண்டம்.
இனிப்புப்பண்டம் பட்டியலில் முதலிடம் இந்த அதிரசதிற்கு உண்டு. ஆதிகாலம் முதல் இன்றைய நவீன காலம் வரை இதன் இடம் மாறாத்தன்மை கொண்டுள்ளது.அதிகமான சுவை (ரசம்)கொண்டுள்ள பண்டம், அதலால் இது அதிரசமாயிற்று.

DSC08253
செய்யத்தேவயான பொருட்கள்: 20 அதிரசம்
பச்சரிசி -2 கோப்பை
வெல்லம் – 1 1/4  or  1 1/2
பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
தண்ணீர் -1 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி
மாவு செய்யும்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீரை நன்கு வடித்து காத்தாடியின் கீழ் சுத்தமான துணியில் பரப்பி 30 நிமிடம் வரை உலர விடவும்.
பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும். சல்லடையின் நாடு தட்டில் சலித்துக்கொள்ளவும்.

images (80)
பாகு :
1 கோப்பை நீரை கொதிக்க வைத்து வெல்லம் சேர்க்கவும், வெல்லம் கரைந்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.
கரைத்த வெல்லபாகை வடிகட்டி மறுபடியும் அடி கனமான பத்திரத்தில் ஊற்றி 8 லிருந்து 10 நிமிடம் காய்ச்சவும். (கம்பிப்பாகு).
பாகு வெந்துகொண்டிருக்கும் போது, ஒரு கோப்பையில் நீர் எடுத்து ஒர், இரண்டு சொட்டு பாகை விட்டுப்பார்க்கவும்.
பாகு கரையாமல் அப்படியே (முத்துப்போல்) இருந்தால் அது சரியான பக்குவம். இதுவே கம்பிப்பாகு செய்யும் முறை.

images
இப்போது தீயைக்குறைத்துக்கொள்ளவும், அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டி தட்டாமல் கிளறவும்.
நன்கு ஒன்று சேர்ந்ததும் நெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும் ஒரு வெள்ளைத்துணி போட்டு மூடி வைக்கவும்.
சூடாக இருக்கும் பொது சிறிது நீர்க்க இருக்கும், கவலை வேண்டாம் மறுநாள் உறவு சேர்ந்துவிடும்.

DSC08274
அதிரசம் செய்யும் முறை:
வாணலியில் எண்ணெய் காய வைத்து நன்கு சூடானதும், எலுமிச்சை அளவு மாவு எடுத்து உருண்டையாக்கி லேசாகத்தட்டி எண்ணெயில் போடவும், லேசாக சிவந்ததும் திருப்பி 10 நொடிகளில் எடுத்துவிடவும்.P4270795

சுட்ட அதிரசத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவும். ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.adhirasam-56343_IMG_2905_4.458x258

சுவையான அதிரசம் ரெடி

 

One thought on “அதிரசம் / Adhirasam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s