இஞ்சி குழம்பு / Ginger Curry

இஞ்சி குழம்பு / Ginger Curry

For English please click:  http://wp.me/p1o34t-m8

இஞ்சியின் மருத்துவ குணம் கணக்கில் அடங்காதது, இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான நோய்கள் குறைந்துவிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பசியைய்த்தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

பூண்டு இஞ்சி குழம்பு :
அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பூண்டு, இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு என்பது அறிந்திருந்தும் அதை எப்படி சேர்ப்பது என்ப ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது ஒரு சில பதார்த்தங்களில் மிகவும் குறைவான அளவே உட்கொள்ள முடிகிறது என்பது அடுத்த குழப்பம், இப்படியாக உணவில் இதை எப்படி கலந்துசுவையாக சமைத்து சாப்பிடுவது என்பது பற்றி ஒரு சிறு சமையல் விளக்கத்துடன் இங்கு பரிமாற உள்ளோம்.
இஞ்சி காரம் மற்றும் பூண்டு வாடை அதிகமான ஆகையால் அதை நாம் உணவில் குறைவாகவே பயன்படுத்துகிறோம். இந்த குழம்பு செய்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். சூடு சாதத்தில் சேர்த்த்தோ! அல்லது கெட்டியாக சுண்ட வைத்து தயிர் சாதத்திற்கு உடன் சேர்த்தோ சாப்பிடலாம். அருமையான சுவை சொன்னாலோ பார்த்தாலோ தெரியாது சுவைத்துப்பாருங்கள். இதோ ரெசிப்பி

இஞ்சி குழம்பு / Ginger Curry
இஞ்சி குழம்பு / Ginger Curry

இஞ்சியின் முக்கியத்துவம் பற்றி சில தகவல்கள் இங்கே உங்களுக்காக: 

இஞ்சி, தூள், உலர்ந்த சுக்கு, எண்ணெய் அல்லது சாறு போன்ற வகையில் பயன்படுத்தலாம்.
சில நேரங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஒப்பனையிலும் சேர்க்கப்படுகிறது.
இது சமையலில் ஒரு பொதுவான பொருளாக உள்ளது.குமட்டலைக்குறைக்க மற்றும் காய்ச்சல், ஜலதோஷம் தசை வலியையும் குறை உதவும் ஒரு அருமையான கை வைத்தியம்.
இஞ்சி குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் இதய நோய் ஆபத்து காரணிகலில் இருந்து விடுபட உதவும்.
இஞ்சி ட்ரீட் நாள்பட்ட அஜீரணத்துக்கு உதவலாம்.
இஞ்சி தூள் குறிப்பிடத்தக்க வகையில் மாதவிடாய் வலியைக் குறைக்கும்
இஞ்சி உட்கொள்ளுவதால் கொழுப்பு நிலைகலை பெருமளவில் குறைக்கும்.
இஞ்சி புற்றுநோய் தடுக்க உதவும் என்று ஒரு பொருள் கொண்டுள்ளது.           இஞ்சி மூளை செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் அல்சர் நோய் எதிராக பாதுகாக்க உதவும்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி -3 அங்குலம் அல்லது 50 கிராம்
பூண்டு – 25 கிராம் அல்லது 10பல்
சோம்பு-1/2 தே .க
சீரகம்- 1/2தே.க
புளி – சிறிய நெல்லிக்கனி அளவு
உப்பு-1 தே .க
மிளகாய்த்தூள்-1 1/2 தே.க                                                                                                  தக்காளி-1
துருவிய தேங்காய்-1 மேஜைக்கரண்டி
வெல்லம் -1 1/2 தே .க
தளிக்க:
வெங்காயம் நறுக்கியது – 1
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி கடுகு-1 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1.இஞ்சி, பூண்டு தோல் உரித்து, மேல் கூறிய அனைத்தையும் (வெல்லம் தவிர) ஒன்றாக நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம்செய் து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.

12167411_972755549432722_1226777828_n
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்சைவாடை மாறும் வரை வதக்கவும்.

12165918_972755539432723_946903776_n12170706_972755496099394_646175854_n
1 1/2 கோப்பை நீர் சேர்த்து எண்ணெய் மேலே வரும் வரை, 5 நிமிடம் இளந்தீயில் கொதிக்கவிடவும் வெல்லம் சேர்த்துகலக்கவும்.
இஞ்சி குழம்பு ரெடி. சூடான சதம் மற்றும் இட்லி தோசைக்கு பயன் படுத்தலாம்.

இஞ்சி குழம்பு / Ginger Curry
இஞ்சி குழம்பு / Ginger Curry

குறிப்பு:
இஞ்சி, பூண்டு லேசாக வதக்கியும் அரைக்கலாம்.
சிறிய வெங்காயம் சேர்த்தல் இன்னும் சுவையைக்கூட்டும்.                           பொடியாக நறுக்கிய இஞ்சியை தளிக்கும் பொது சிறிது சேர்க்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s