Navarathri Sundal / நவ வகை சுண்டல்:
For English please click: http://wp.me/p1o34t-YT
நவ வகை சுண்டல் :
தசரா 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு சிறப்புப்பண்டிகை ஆகும். இந்த நாட்களில், நாம் நம்மை சுற்றி தெய்வீகம் மற்றும் நற்சிந்தனை ஆற்றலைக் கொண்டு வர, துர்கா, லட்சுமி, சரஸ்வதி மந்திரங்களை பாராயணம் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்யம் செய்து வழிபடுவோம். இந்த ஒன்பது நாட்களும் பல வகை சுண்டல் செய்வது வழக்கம், அதை கருத்தில் வைத்து இந்த அற்புதமான நவராத்திரியைக் கொண்டாட, சில சுவாரசியமான கருத்துக்களை இங்கு பகிர்கிறோம்.
நித்தம் சுண்டல் அலுப்பு தட்டாமல் இருக்க மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க சில குறிப்புகள்:
1.சுண்டலில் சுக்குப்பொடி அல்லது இடித்த இஞ்சி சேர்க்கவும்.
2.மிளகு, சீரகத்தூள் தூவி பரிமாறலாம்.
3. பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் தாளிக்கவும்.
4. துருவிய காராட், தேங்காய் சேர்க்கலாம்.
5. கொத்தமல்லி, கறிவேப்பிலைசேர்த்தால் மனம் அதிகரிகும்.
6.சில துளிகள் எலுமிச்சைச்சாறு சுவையைக் கூட்டும், அதிக மணி நேரம் வரை கெடாமலும் இருக்கும்
ஒன்பது வகை சுண்டல்:
அனைத்து சுண்டல் வகையும் வேகவைத்து, சுவையாக தளித்து படைக்க :
6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்த சுண்டலை குக்கரில் 3 விசில் வேகவிட்டுஆறியதும், வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து,கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வேகவைத்த சுண்டலை சேர்த்துக்கிளறவும்.
துருவிய தேங்காய், உப்பு,சேர்க்கவும்.
சுண்டல் ரெடி
1.கருபுக்கொண்டைக்கடலை சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்
2.காபுல் கடலை சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
3.பாசிப்பயறு சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
4.வேர்கடலை சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
5.பட்டாணி சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்
6.கடலைப்பருப்பு சுண்டல்,1 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
7.முளை கட்டிய பயறு சுண்டல், 6-8 மணி நேரம் ஊற வைத்து, முளை கட்டி பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
8.நவதானிய சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.
9.உளுத்தம் பருப்பு சுண்டல் பொன்னிரமாக வறுத்து வேகவைத்து தாளிக்கவும்.