இட்லி தோசை காரப்பொடி:
For English please click: http://wp.me/p1o34t-6s
அன்றாடம் இட்லி தோசையில் கண்விழிப்பது நமது தென்னிந்திய கலாச்சாரம். பல வகை சைடு டிஷ்கள் தொட்டுக்கொள்ள செய்தாலும் இட்லி பொடியின் சுவையை தினமும் ஒரு இட்லிக்கவது வைத்து சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். காரசாரமான, கரகரப்பான இட்லிபொடியின் சுவை மிகவும் ருசியானது. விடுமுறை நாட்களில் சிலநிமிடம் ஒதுக்கி வீட்டிலேயே மணமான இட்லி போடி செய்து அசத்துங்கள். கடையில் வாங்குவதை விட இது போதுமான அளவு கிடைக்கும்.

செய்யத்தேவையான பொருட்கள்: அளவு 1 கோப்பை – 250 gms
வரமிளகாய்-1 கோப்பை அல்லது-20
கலைப்பருப்பு-1/2 கோப்பை அல்லது-60 கி.ம்
துவரம்பருப்பு 1/2 கோப்பை அல்லது-60 கி.ம்
உளுத்தன்பருப்பு-1 கோப்பை அல்லது 110 கிராம்
கறிவேப்பிலை 25 கி ம்
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பு மிளகாய் எலாவற்றையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
சிறிது என்னை விட்டு பெருங்காயம், உப்பு இரண்டையும் மிதமான தீயில் பொரித்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி என்னை விட்டு கறிவேப்பிலையை சரசர என்ற வரும் வரை பொரித்தெடுக்கவும்.
எல்லாவற்றையும் ஆற வைத்து, மிளகாய் கறிவேப்பிலை முதலில் அரைத்து பின்னர் வறுத்த பருப்பு வகைகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பின்னர் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து 20 25 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.