எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு:
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எல்லோராலும் விரும்பி ஏற்கக்கூடியது. கத்திரிக்காய் எண்ணெய்யில் நன்கு வேகும் வரை வதக்கி, புளிச்சருடன் சேர்த்து மசாலா கலவையில் கொதிக்க வைத்து எண்ணெய் அழகாய் மேலே மிதக்கும் போது எண்ணெய் கத்திரிக்காய் குழம்புபின் மணமும் சுவையும் நம்மை பசியில் ஏங்க வைக்கும். காரக்குழம்பு அல்லது புளி குழம்பின் பிரதானம் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, அதிலுள்ள காயும் சரி, குழம்பும் சரி அற்புதமான சுவையுடையது.

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் -1/4 கிலோ (பிஞ்சாக)
சின்ன வெங்காய -10
பூண்டு – 5
தக்காளி-1 பெரியது
புளி -எலுமிச்சம்பழம் அளவு -1 கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
உப்பு- 1 தே .க
மஞ்சள் தூள்-1/4 தே .க
மசாலாமிளகாய்த்தூள் -2 1/2 அல்லது
மிளகாய்த்தூள்-1 +மல்லித்தூள்-1 1/2 தே .க
தளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
சீரகம்-1/4 தே .க
வெந்தயம்-1/4தே .க
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
1. கத்திரிக்காயை பாதியாக வெட்டி , மேலே இரண்டு கீறல் செய்து நீரில் போட்டு வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டு தோல் உரித்து, நீள வாக்கீல் நறுக்கிக்கொள்ளவும்.
3. தக்காளியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும்.
4. அடி கனமான பாத்திரத்தைக்காயவைத்து தாளிதம் செய்யவும்.
உடன் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை வதக்கவும்.
5. தோல் சுருங்கி, நிறம் மாறி வரும் சமயம் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
6. இப்போது கரைத்த புளிச்சாரு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்து,குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும் .
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி
7. சூடான சாதத்தோடு பரிமாறவும்.