ஆடி கும்மாயம். / ஆடிக்கூழ் :
ஆடிக்கும்மயம் இனிப்பு வகையைச்சேர்ந்தது. நகரத்தார் விருந்துகளில் முக்கிய இடம் பெற்றது. இது மிதமான இனிப்புடன் சுவைமிகுந்தது, தொண்டைக்கும் நாக்கிற்கும் இதமான ஒரு அற்புத இனிப்பு வகை. இதன் மூலப்பொருள் உளுந்து, கருப்பட்டி, நெய். நம் முன்னோர்கள் தந்து சென்ற அதிசய மருத்துவ குணம் நிறைந்த உணவில் இதுவும் ஒன்று.
இதை இனிப்பாக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் அறிவோம்;
1. பொதுவாக உளுந்து நம் அன்றாட உணவான இட்லியில் நாம் பயன்படுத்துகிறோம், ஏனெனில் இது புரதச்சத்து நிறைந்தது. புரதம் தசை கட்டிடம் மற்றும் ஒட்டுமத்த உடல் கட்டமைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
2.ஆடி கும்மயம் இரும்புச்சத்து நிறைந்தது காரணம் நாம் சேர்க்கும் கருப்பட்டி.
3.சூடைத்தனிக்கவும் சுவயைக்கூட்டவும் நெய்.
4.மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கில் இரும்புச்சத்து குறைய வாய்ப்பு உள்ளதால், இது பெண்களுக்கு மிக உன்னதமான உணவாகக்கூறப்படுகிறது.
5.இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் குறிப்பாக பூப்படைந்த குழந்தைகளுக்கு இதை தினம் செய்து கொடுப்பார்கள்.
செய்யத்தேவையான பொருட்கள்: இந்த மாவை, மொத்தமாக வறுத்து அரைத்து 6 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறு அளவாக வறுத்து மென்மையாக அரைத்தும் செய்யலாம்.
செய்முறை:
உளுந்து-1 கிலோ, அல்லது 1 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கிலோ, அல்லது-1/4
பச்சரிசி-1/4கிலோ, அல்லது 1/4 கோப்பை
இவற்றை வெறும் வானலியில் பொன்னிறமாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
செட்டிநாட்டு ஆடி கும்மாயம் மாவு பக்குவமான முறையில் தயாரித்தது பெற்றிட லிங்கை சொடுக்கவும்.
https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/kummayam-mavu
கும்மாயம் செய்யத்தேவையான பொருட்கள்:
கும்மயமாவு-1 கோப்பை
கருப்பட்டி-1/2 கோப்பை
வெல்லம் -1/2 கோப்பை
தண்ணீர்- 3 அல்லது-4 கோப்பை
நெய் -1/4 கோப்பை அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப
1. வானலியில் – 1 தேக்கரண்டி நெய் சேர்த்து மாவை 3 நிமிடத் வரை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். வறுத்த மாவை ஆற விடவும்.
2. மற்றொரு பத்திரத்தில் கருப்பட்டி, வெல்லம்,1/2 கோப்பைத்தண்ணீர், சேர்த்து அடிப்பில் வைத்துக்கரைத்துக்கொள்ளவும்.
3. பாகை வடிகட்டி ஆறியதும் வருத்தமாவையும் மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து கையால் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
4. இப்போது அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ளவும்.
5. கும்மாயம் நன்கு வெந்து முட்டை முட்டையாக, பத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயத்தில் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான கும்மாயம் ரெடி.
கும்மாயம் 2 லிருந்து 3 நட்டகல் வரை கடாமல் இருக்கும்.
செட்டிநாட்டு ஆடி கும்மாயம் மாவு பக்குவமான முறையில் தயாரித்தது பெற்றிட லிங்கை சொடுக்கவும்