காய்கறி சாம்பார் :
For English please click: http://wp.me/p1o34t-hc
தென்னிந்திய சாப்பாடு என்றாலே சந்தேகமில்லாமல் சாம்பாருடன் பரிமாறப்படும் என்பது திண்ணம். அன்றாடம் தயாரிக்கும் சாம்பாரில் தான் எத்தனை சுவை எவ்வளவு மணம். சாப்பிட்ட பின்னும் கை மணக்கும் பக்குவம் நம் தென்னிந்திய மக்களின் கை பக்குவம்.தகுந்த பொருளடக்கம், அளவு முறை கையாளும் விதமே அற்புத சுவைக்குக்காரணம் எனலாம். எல்லாவிதமான காய்களுமே சாம்பார் செய்ய உகந்தது, அதில் முருங்கக்காய் தனிச்சுவை. வெறும் வெங்காயம் தக்காளி வைத்து சாம்பார் செய்தாலும் சுவைதான். இப்போது கேரட் ,பீன்ஸ் சேர்த்து செய்யும் சாம்பார் இங்கு பகிர உள்ளேன் எந்தக்காய் சேர்த்தாலும் செய் முறை ஒன்றே!

தேவையான பொருட்கள் : நான்கு நபருக்கு பரிமாறலாம்
கேரட் ,பீன்ஸ் – 1/2 கிலோ
வெங்காயம்-1 வெட்டியது
தக்காளி -1 பெரியது, (பாதி தாளிக்கும்போது வதக்கவும், பாதியைக் காயுடன் வேகவைக்கவும்)
துவரம் பருப்பு- 1 கோப்பை வேகவைத்தது அல்லது 2 கைப்பிடி பருப்பு வேகவைக்கவும்.
உப்பு-1 தே .க
மஞ்சள் தூள், பெரும்காயத்தூள், தலா -1/4 தே .க
புளி -1 சிறிய எலுமிச்சை அளவு எடுத்து கரைத்துக்கொள்ளவும்.
சாம்பார் மசாலா பொடி-1 1/2தே .க
தாளிக்க :
எண்ணெய் -2 தே .க
கடுகு-1 தே .க
உளுத்தம் பருப்பு -1/2 தே .க
சீரகம், வெந்தயம்-1/4 தே .க
சின்ன வெங்காயம் வெட்டியது-3
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
பருப்பு, காய், தனித்தனியே வேகவைத்துக்கொள்ளவும்.
காயுடன் வெட்டிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.
பின் வேகவைத்த பருப்பு, காய்கறிகள், உப்பு, புளிச்சாரு, சாம்பார் மசாலா பொடி, மஞ்சள் தூள், பெருங்காயப்பொடிசேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
பிறகு தாளித்து, கறிவேப்பிலை, வெட்டிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், சாம்பாருடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான, மனம் நிறைந்த சாம்பார் ரெடி.
