அவசர துவையல் :
For English please click: http://wp.me/p1o34t-E6
Rosappu Thovayal: http://wp.me/p1o34t-Et
சில சமயம் நாம் எளிதாக, அவசரமாக சிலமணித்துளிகளில் சமைத்து பசியாற விரும்புவோம். அச்சமயம் என்ன செய்வது என்ற குழப்பம் வெகுவாக இருக்கும், இதுபோன்ற சுலபமான குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவையான பொருட்களும் குறைவும். இந்த துவையல் இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றிர்கும் ஏற்றது. மனமும் சுவையும் உங்களை மகிழச்செய்யும். இந்த மூன்று அவசர தொவையலுமே மிகவும் வித்யாசமானது.
1.தேங்காய் துவையல் :
தேவையான பொருட்கள்:
தேங்காய்-1 மூடி
உப்பு-1/2
புளி
வரமிளகாய் -4
தாளிக்க:
எண்ணெய் -1தே .க
கடுகு-1 தே .க
உளுந்தம்பருப்பு -1 தே .க
பெரும்காயம் -1/2 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1. கடாயில் என்னை காய வைத்து மேலே குறிப்பிட்டுள்ள தாளிக்க பொருட்களை தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
2.தேங்காய், உப்பு, புளி ,வரமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், பிறகு தாளித்த பொருட்களை சேர்த்து 1 நொடி அரைத்து எடுக்கவும். அதிகம் அரைத்தால் சுவை மாறிவிடும் ஆகையால் தளித்த பொருட்களை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அவசர துவையல் தயார்.
2. தேங்காய் ,வெங்காயம் பூண்டு துவையல் :
இது மிகவும் சுலபமானது வெள்ளை வெளேர் என்றிருக்கும். பச்சையாக அரைத்ததும் சாப்பிடலாம்.இந்தக்கலவை மிகவும் சுவையானது.
தேவயான பொருட்கள் :
தேங்காய் 1 மூடி
பச்சை மிளகாய்-3
உப்பு-1/2 தே .க
புளி – 1 சொலை
சின்ன வெங்காயம்- 4
பூண்டு-2
எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் கடுகு தாளித்து பரிமாறலாம்.
3. ரோசாப்பூ துவையல் :
இதன் பெயர் காரணம் அழகான ரோசப்பூவின் நிறத்தை கொண்டுடயதால் இது ரோசாப்பூ துவையல் என்று அழைக்கப்பெற்றது.பச்சை வெங்காயத்தின் நிறமும், தக்காளி, வரமிளகாயின் நிறமும் அப்படியே அரைப்பதால் அதன் நிறம் ஒன்று சேர்ந்து ரோசப்பூவின் நிரத்தைக்கொண்டிருப்பதலோ என்னவோ! இது ரோசாப்பூ தொவையல் ஆயிற்று. இது அம்மியில் அரைத்து தயாரிக்கும் முறையாகவே நான் என் தாயாரிடம் கற்றுக்கொண்டேன், இப்போதைய சூழ்நிலைக்கு அது கண்டிப்பாக சாத்தியம் இல்லை ஆகவே மிக்சியிலும் சுவைமாறது செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்-20
தக்காளி-1 சிறியது
பூண்டு-4
உப்பு-1/2 தே .க
வரமிளகாய்-4
செய்முறை:
எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
ரோசாப்பூ துவையல் ரெடி .
வெங்காயம், பூண்டு,பச்சை வாடை பிடிக்காதவர்கள் தாளிதம் செய்து உண்ணலாம்.
இது தோசை, இட்லி, ஆப்பம் ஆகியவற்றிற்கு ஏற்றது.