பூர்ண கொழுக்கட்டை அல்லது எருக்கங்கொழுக்கட்டை :
For English please click link: http://wp.me/p1o34t-hu
எருக்கம் பூவின் மென்மையும் வடிவமும் உடையதால் இது எருக்கம் கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.எருக்கம் பூ விநாயகருக்கு சூட்டுவோம், அதன் வடிவத்தில் கொழுக்கட்டையாக பிரசாதம் படைக்கப்படுகிறது.
கொழுக்கட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது ஏனெனில் முக்கியமாக இது ஆவியில் வேகவைக்கிறோம் அதனால் சத்துக்கள் குறையாமல் கிடைக்கிறது. இனிப்பு, உப்பு, காரம் போன்ற சுவையும் இதனுள் அடக்கம்.
செய்முறை :
மாவு பிசைய
பச்சரிசி மாவு – 1 கோப்பை
உப்பு-1/4 தே .க
நெய் அல்லது எண்ணெய் -1/4 தே க
இனிப்பு கலவை உள்ளடக்க:
தேங்காய் துருவல்-1 கோப்பை
வெல்லம் பொடித்தது 1/4 கோப்பை
முந்திரி (உடைத்தது) -1 மே .க
நெய்-1 தே .க
செய்முறை:
வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, உடைத்த முந்திரியை வறுத்துக்கொள்ளவும், துருவிய தேங்காயை 1 நிமிடம் வதக்கவும்.
அதில் வெல்லம், ஏலக்காய், சேர்த்து கலக்கவும் வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும்.
உப்பு கலவை உள்ளடக்க:
உளுந்து 1 கை
உப்பு-1/4 தே .க
வரமிளகாய்-3
சீரகம்-1/2 தே .க
தளிக்க-எண்ணெய் -2 தே .க
கடுகு-1
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நீரை நன்றாக வடித்து மிக்சியில், உளுந்து,சீரகம், வரமிளகாய் உப்பு சேர்த்து குருணையாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து,தாளிதம் செய்து அரைத்த கலவையுடன் தேங்காய் சேர்த்து வதக்கவும் வெந்ததும் ஆறவைக்கவும்.
இந்தககலவைகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
மாவு கலக்க:
1. தண்ணீர் கொதிக்கவைக்கவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவைப்போட்டு கொதிக்கும் வெந்நீர் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
3. மாவு கெட்டியாக உருட்டும் அளவிற்கு கலக்கிக்கொள்ளவும்.
4. எலுமிச்சம்பழம் அளவிற்கு மாவை உருட்டிக்கொள்ளவும்.
5. பிறகு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில், நெய் அல்லது தண்ணீர் உதவியுடன், தட்டையாக தட்டி, தேவையான கலவையை உள்ளடைத்து மூடி, தேவையான வடிவத்தில் தயார் செய்து வைக்கவும்.
6. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
7. எருக்கம் கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை தயார்.