நீர் கொழுக்கட்டை / Rice Balls:
For English please click: http://wp.me/p1o34t-pl
நீர் கொழுக்கட்டை (அரிசி கொழுக்கட்டை)
ஆவியில் வேகவைத்த எந்த உணவும் நம் உடலுக்கு மிகவும் ஏற்றது. சத்துக்கள் குறையாமல் முழுமையாக நமக்கு கிடைக்கும், நாம் ஆவியில் வேகவைத்த இட்லி, புட்டு , கொழுக்கட்டை, இடியாப்பம் போன்ற அற்புதமான உணவுவகைகளை நம் தெனிந்திய உணவில் காணலாம். உதாரணமாக காலையில் தினமும் நாம் உண்ணும் பலகாரம் இட்லி. நீர் கொழுக்கட்டை பலவிதமாக செய்வதுண்டு உடனே அரைத்து செய்யும் இந்த முறை மிகவும் ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 2 கோப்பை, (தேவைப்பட்டால் 2 மே .க பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு-1 தே .க
தேங்காய் துருவியது-1 மூடி
சீரகம்-1 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
வர மிளகாய்-4
எண்ணெய் -2 மே .க
செய்முறை :
அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அதில் அரைத்த மாவைக்கொட்டி இடை விடாமல் மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் அறியாதும் எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். மிளகாய், அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
