சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு / Vegetarian fish curry:
For English please click link http://wp.me/p1o34t-i4
சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு
மீன் குழம்பின் அரிய சுவையை அனைவரும் உண்டு மகிழ அதே செய்முறையை வாழைப்பூ கொண்டு சமைக்கலாம் . வாழைப்பூ அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. முக்கியமாக இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதால் பெண்களுக்கு மாத விளக்கு சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் இது மிகச் சிறந்த உணவாக உட்கொள்ளுதல் நலம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழைப்பூ தொவட்டல், வாழைப்பூ கூட்டு, போரியல் வடை என பல வகையுண்டு.
இங்கு வித்தியாசமான வாழைப்பூ மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு வாழைப்பூவின் உட்பகுதி பூக்களே மிகவும் சிறந்தது , ஒவ்வொரு பூவின் உள்ளும் இருக்கும் நரம்புகளை (பிளாஸ்டிக் போன்ற) அகற்றி, மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் நிறம் மாறாமல் இருக்கும்.தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
Image courtesy google
செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைப்பூ-1 கோப்பை
சின்ன வெங்காயம்-9 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
பூண்டு-7 பல் வெட்டிக்கொள்ளவும்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு-1 தே க
மிளகாய்த்தூள் -2 தே க (சாம்பார் மசாலாத்தூள் )
புளி கரைத்தது 1/4 கோப்பை (1 எலுமிச்சை அளவு )
மஞ்சள் த்தூள் -1/4தே க
தாளிக்க :
எண்ணெய் -2 மே .க
சோம்பு-1/4 தே க
வெந்தயம்-சீரகம்-1/4 தே க
அரைக்கத்தேவயான பொருட்கள்:
வெங்காயம்-1
தக்காளி-1
சோம்பு-1
சீரகம்-1/2
இவற்றை விழுதாக அறித்துக்கொள்ளவும். இவற்றை லேசாக வதக்கியும் அரைக்கலாம்
செய்முறை:
கடாயில் எண்ணெய் காய வைத்து “தளிக்க” பொருட்களைத் தாளித்துக்கொள்ளவும்.
வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர், தண்ணீர் 2 கோப்பைசேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொக்கவிடவும்.
சைவ மீன் குழம்பு ரெடி .
Super
LikeLike