கடலைக்கறி :
நம் நாட்டில் சுவையான புட்டு வகை – இனிப்புப்புட்டு, மோர் புட்டு தாளித்தல், புட்டு கொழுக்கட்டை, இன்னும் பலவகைசெய்வதுண்டு. கேரளத்தில் மிகவும் பிரபலமான உணவு இந்த புட்டு கடலைகறி, கேரள மக்களால் விரும்பி உண்ணும் உணவு இந்த புட்டுக்கு இணையாக கடலைக்கறி நம்மில் பலரும் விரும்பி செய்வதுண்டு ஆகையால் இந்த செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளோம்.

செய்யத் தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை( கருப்பு ) -1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி
சிவப்புமிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் -1/2தேக்கரண்டி
அரைக்க :
வர மிளகாய்-5, மிளகு -1/2 தே .க
மல்லி-11/2 தேக்கரண்டி
பட்டை-1 சிறியது
கிராம்பு-2
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
இவற்றை வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய் ந்ததும் வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
வேங்காயம் தக்காளியைப்பொடியாக வெட்டிவைத்துகொள்ளவும்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 கொத்து
வரமிளகாய்-2
செய்முறை:
1. கொண்டைக்கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காயவைத்து, மேலே தளிக்க பொருட்களை தாளிதம் செய்துகொள்ளவும்.
3. வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நல்லமனம் வரும் வரை வதக்கவும்.
4. தக்காளி, உப்பு சேர்த்து தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, அரைத்த விழுது, 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள்,சிவப்புமிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் இளந்தீயில் கொதிக்கவிடவும்.
5.கொத்தமல்லி இலை தூவி புட்டுடனோ, சப்பாத்தி உடனோ பரிமாறலாம்.

குறிப்பு:
மல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் இதற்கு பதிலாக கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம் . http://wp.me/p6uzdK-3P