வரமிளகாய்த்தொக்கு :
For English please click here: http://wp.me/p1o34t-vr
வர மிளகாய்த்தொக்கு மிக விரைவாகத்தயார் செய்து விடலாம் தேவையான பொருட்களோ குறைவு. சில நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த தொக்கு நல்ல காரமாக இருக்கும். இது இட்லி, தோசை காரப்போடிக்கு பதிலாக பரிமாறலாம். எப்போதும் சதா இட்லி பொடி போர் அடித்து விட்டதா? முயற்சி செய்யுங்கள் சூடான இட்லியோடு இது சுவையாக இருக்கும். சிறு துளி தொட்டு சாப்பிட்டால் போதும் பச்சைப்பூண்டுடன் வருத்த மிளகாய், நல்லெண்ணெய் சேர்ந்து அற்புதமான சுவையாக இருக்கும்.இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: இந்த அளவு 20திலிருந்து 30 இட்லி வரை தொட்டு சாப்பிடலாம்.
வரமிளகாய்-10
பூண்டு-4 பல் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு -1/2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வரமிளகாயை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இத்துடன் உரித்த பூண்டு , உப்பு சேர்த்து கரகரப்பாக இடிதுக்கொள்ளவும்.
மிளகாய்த்தொக்கு ரெடி.அரைத்தவுடன் இது காரமாக இருக்கும் அடுத்தநாள் காரம் குறைந்துவிடும்.
பரிமாறும்போது இதில், நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துகொள்ளவும்.
இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்
குறிப்பு:
மிளகாயை சிறிது இடித்துக்கொண்டு, பிறகு உப்பு, பூண்டு சேர்த்து இடிக்கவும்.
தொக்குடன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பரிமாறவும்.
பச்சைப்பூண்டு வாடை பிடிக்காவிட்டால் சிறிது வதக்கிக்கொள்ளலாம்