கத்திரிக்காய் தெரக்கல் / Brinjal Therakkal:
For English please click: http://wp.me/p1o34t-k4
கத்திரிக்காய் தெரக்கல் :
செட்டிநாட்டுப்பகுதியில் இதை, கத்திரிக்காய் தெரக்கல், கத்திரிக்காய் அவியல் அல்லது கள்ள வீட்டுக்கதிரிக்காய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பெயர் காரணம்: குறிப்பிட்ட மக்கள், பொதுவாக இதை அடிக்கடி தங்கள் காலை உணவிற்கு தயாரிப்பார்கள். காரணம் தங்கள் துறையில் கடின உழைப்பைச் செய்யவும், அவர்களுக்கு முழு நாள் சுறுசுறுப்பக செயல்படவும், ஆற்றல் மிக்க பூர்த்தியான முழு உணவாக இது அமையும். மேலும் இதன் உள்ளீடு குறைவு அனால் அதிக அளவு கிடைக்கும். அதனால் தாராளமாக உண்ணவும், விருந்தளிக்கவும் எளிதாகச்செய்து விடலாம்.
தெரக்கல் என்றால் எண்ணெயில் வதக்குதல் என்று பொருள், ஆகையால் இதன் சுவையும் அதிகம்.பொதுவாக செட்டிநாட்டு கல்யாணங்களில் சிறப்பாக பரிமாறப்படும்.
பொருளடக்கம்:
கத்திரிக்காய்-1/4 கி
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
தக்காளி-2
அரைக்க :
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பூண்டு-4 பல்
தேங்காய்- 3 மேஜைக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி
வர மிளகாய்-7 அல்லது மிளகாய் பேஸ்ட்
அனைத்து பொருட்களையும் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
தளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
உளுந்து-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1.கத்திரிக்காய், வெங்காயம், உருளைகிழங்கு, மற்றும் தக்காளியை கன வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் காயவைத்து மேற்கூறிய “தளிக்க” பொருட்களை தாளிதம் செய்யவும்.
3.கறிவேப்பிலை வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் 2 நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. தக்காளி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து தக்காளி தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5. இப்போது அறைத்த விழுது, 2 கோப்பை தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
சூடான இட்டலி தோசையுடன் பரிமாறவும்.