மிளகு குழம்பு :
For English recipe please click: http://wp.me/p1o34t-a8
காரசார மான மிளகு குழம்பு மனமும், சுவையும் நிறைந்தது, இந்த மிளகு குழம்பு ஜீரன சக்தி, வாயுதொல்லை, சளி, இருமல் போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும் மருந்தாகப்பயன்படுகிறது மேலும், கருப்பு மிளகின் மூலம் செரிமானம் மேம்படுத்தப்படுகிறது, ஒரு வழியில் சுவை மொட்டுகளை தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவு பொருட்களை செரிமானம் செய்யத்தூண்டுகிறது. இதில் மற்றொரு வழி – உங்கள் உடல் பல நன்மைகளை ஈர்க்க கருப்பு மிளகு உதவி செய்கிறது , மிளகின் மெளிதான வெளி அடுக்கு கொழுப்பை எரிக்கும் ஆற்றல் உள்ளது தேவையில்லாத கொழுப்பு செல்களை முறிக்கத் தூண்டுகிறது. கறிவேப்பிலையின் நற்குணமும் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கும். நல்ல பசியைத்தூண்டும். சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்யத்தேவையான பொருட்கள்:
மிளகு – 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு -1மேஜைக்கரண்டி
மல்லி -1 மேஜைக்கரண்டி
உளுந்து- 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-1 கைப்பிடி அளவு
உப்பு -1 1/2
சிவப்பு மிளகாய் 3
சீரகம் -1தேக்கரண்டி
புளி-1 சிறய எலுமிச்சம்பழம் அளவு
செய்முறை
1.வாணலியைக் காயவைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மேல் குறிப்பிட்டுள்ள அனைத்தையும்மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும்.(பொன்னிறமாக) எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
2. ஆறியதும் உப்பு, புளி, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
3. அதே வாணலியில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த கலவையைச்சேர்க்கவும், இளந்தீயில் கொதிக்க விடவும் 3 நிமிடம் வரை கொதித்ததும், வெல்லம்- 1 தேக்கரண்டி சேர்த்து இறக்கவும் மிளகு குழம்பு தயார்.
4.பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது மிளகுக்குழம்பு உட்கொள்ள உடல் ஆரோகியம் பெரும்