கோசுமல்லி/Kosumalli :
Click link to read recipe in English, http://wp.me/p1o34t-6e
செட்டிநாட்டின் தனிச்சுவை வாய்ந்த கோசுமல்லி, இடியப்பம், இட்டலி, தோசையுடன் பரிமாற ஏற்றது. மிதமான காரம், உப்பு , புளி, சுவை கொண்டது ஆகையால் இது மிகவும் சீக்கிரம் ஜீரணிக்ககூடியது, அனைவருக்கும் ஏற்ற ஒரு இதமான சைட் டிஷ் .
இதன் செய்முறை இரண்டு வகையாகும்
1. மூலப்பொருள் கத்திரிக்காய், தீயில் சுட்டு தோலுரித்து செய்யலாம்.
2. கத்திரிக்காய், நீரில் வேகவைத்து, தோலுரித்தும் செய்யலாம்
இதன் மூலப்பொருள் கத்திரிக்காய்
நார் சத்து நிறைந்தது.
உடல் எடை குறைக்க உதவும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றும் சக்தி பெற்றது.
இயற்கையில் தோல் பளபளப்பை அதிகரிக்கும். மாரடைப்பைத்தடுக்கிறது.
கோசுமல்லி செய்யத் தேவையான பொருட்கள்:
முற்றிய (விதையுள்ள) கத்திரிக்காய் – 1/2 கிலோ உருளைக்கிழங்கு -1
சின்ன வெங்காயம்-10
பச்சை மிளகாய் -7
உப்பு-1 தேக்கரண்டி
புளித்தண்ணீர் -1 1/2 மேஜைக்கரண்டி
தக்காளி-1
கறிவேப்பிலை-1 கொத்து
கொத்தமல்லி இலை -2 கொத்து
செய் முறை :
1. உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை நன்கு வேகவைத்து ,தோல் உரித்துக்கொள்ளவும். அல்லது அடுப்பில் வாட்டி தோலுரிக்கவும்.
2. சின்ன வெங்காயம் தோலுரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும், தக்காளி, பச்சைமிளகாயும் வெட்டிவைதுக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போட்டு நன்கு பிசைந்து,கொள்ளவும். உப்பு, புளி, 2 கோப்பை நீர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
4. வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரித்துக்கொள்ளவும்.
5. கறிவேப்பிலை, வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு, கோசுமல்லியை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு:
1. அடுப்பில் வாட்டி, தோலுரித்த, கத்திரிக்காய் ஒரு நல்ல வாடையுடன் சுவையாக இருக்கும்.
2.அதிக நேரம் கொதிக்க விட்டால் கோசுமல்லியின் சுவை சிறப்பாக இருக்காது.
Below two pictures courtesy solai Achi’s image for the reader’s convenience.