கவுணி அரிசி:
கவுணி அரிசி இனிப்பு வகையைச்சேர்ந்தது, பெயர் இதன் மூலப் பொருளைக்கொண்டுள்ளது.தனித்துவம் வாய்ந்த இந்த கவுணி அரிசி மிகவும் சுவையானது, செய்முறையும் மிகவும் எளிதானது. ஒரு சமயம் நகரத்தார்கள் சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு கொண்டு விற்கச்சென்றனர் , சிலர் தனது தொழில் துறை சம்பந்தமாக அங்கு தங்கி வந்தனர் அச்சமயம் சுவை கண்ட அங்குள்ள சிறப்பு உணவு முறைகளை தனது குடும்பத்தினருக்காக கொண்டு வந்தனர் இவ்வாறு கடல்கடந்து வந்த சிறப்பு உணவு தான் இந்த கவுணி அரிசி.
தென்கிழக்கு ஆசியாவில் சாகுபடி செய்யப்படும் இந்த அரிசி மலேசியா மற்றும் சிங்கபூரில் தரமானதாக கிடைக்கப்பெறலாம். வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகளில் இதுவும் குறிப்பிடத்தக்கது. இந்த அரிசி பெருமபாலும் செட்டிநாட்டு பகுதிகளில் பயிரிடப்பட்டடு விற்கப்படுகிறது. இந்த அரிசி ஓட்டும் தன்மை கொண்டது. சுவை மிகுந்த இந்த அரிசியின் ஊதா நிறம் இயற்கையானது .

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுணி அரிசி-1 கோப்பை
சர்க்கரை-1 கோப்பை
தேங்காய் துருவியது-3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
செய்முறை :
1. அரிசியை கல் குருணை நீக்கி நன்கு கழுவி 6 முதல் 8 மணிநேரம் ஊர வைக்கவும் .
2. மறுநாள் குக்கரில் 4 அலல்து 5 விசில் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
3. சூடு குறைந்ததும் நன்கு மசித்துவிட்டு இளம் சூட்டில் சர்க்கரை கலந்து ,தேங்காய்,நெய் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
Pls send by mail
LikeLike
Visit link
LikeLike