காசி அல்வா : பெயர்காரணம் காசியில் புகழ்பெற்றது.
பூசணிக்காய் அல்வா
காசி அல்வா இந்த இனிப்பு பெரும்பாலான விழாக்களிலும்,விருந்துகளிலும் பரிமாறப்படும் சுவைமிகுந்த இனிப்புப்பண்டமாகும்..இது வெள்ளை பூசணிக்காயில் தயாரிக்கப்படுகிறது.1 வாரம் முதல் 10 நாட்டகள் வரை கெடாதிருக்கும் .

பொருளடக்கம் :
வெள்ளை பூசணிக்காய் -300 கிம் துருவியது 2 கோப்பை
சீனி -3/4 கோப்பை
நெய் -2 மேஜைக்கரண்டி
முந்திரி திராட்சை -தலா 2 தேக்கரண்டி பொடித்தது
கலர் -2 சிட்டிகை
செய்முறை:
1. பூசணிக்காயை தோல் அகற்றி , விதை நீக்கி துருவிக்கொள்ளவும்.
2.கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிரமாக வருத்தெடுக்கவும்.
3.அதே கடையில் துருவிய பூசணிக்காயை போட்டு வதக்கவும்.
4. பூசணிக்காய் அதிலுள்ள நீர் சுண்டும்வரை வதக்கவும்.(10 -15 நிமிடம்)
5. இப்போது பூட் கலர், மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
6.மிதமான தீயில் கிளறவும், படிப்படியாக அல்வா கடையில் ஒட்டாது திரண்டு வரும் இது அல்வாவின் பக்குவம்
7.வருத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும் கிளறி இறக்கவும்.