செட்டிநாட்டின் சிறப்பு கந்தரப்பம்:
கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது . இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும். செய்முறையும் மிகவும் எளிதானது, அளவு மற்றும் பொருளடக்கத்தை சரியாக கையாளும்போது கந்தரப்பத்தின் தன்மையும், வடிவமும் துள்ளியமாக அமையும். கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம் .
பொருளடக்கம்: 20 முதல் 25 பணியாரம் வரை
பச்சரிசி-1 கோப்பை, மேல் சம அளவு
புழுங்கல் அரிசி-1/2 கோப்பை, மேல் சம அளவு
உளுந்து – அரிசியின் மேல் கோபுர அளவு ,அல்லது 1 மேஜைக்கரண்டி
வெந்தயம்-1/2 தேக்கரண்டி
ஏலக்காய் -3
தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி
எண்ணை பொரித்தெடுக்க
வெல்லம் -1 கோப்பை பொடித்தது
செய்முறை:
1.அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும்.
2.பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும்,ஏலக்காய்,தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன் படிதலாம்.
3.வானலியில் எண்ணையை காய வைக்கவும்.
4.காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணையின் நடுவில் மெதுவாக உற்றவும்,
5,ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும்.இ து போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும்.
பணியாரம் மீந்து விட்டால் இட்லி பத்திரத்தில் ஆவியில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தல் மிகவும் பூ போன்று மிருதுவாக இருக்கும்.