உணவே மருந்து

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி :

உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருக்கூடியது வெள்ளரிக்காய். இதை நாம் நமது அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தங்களை பதுகத்து கொள்வது மிகவும் அவசியம். வேலைக்கு செல்பவர்கள் இதை எடுத்துச்செல்லாம். பச்சை மிளகாய் சேர்ப்பதால் இது நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை புளிக்காதிருக்கும்.
வெள்ளரிக்கையின் நற்குணங்கள் பற்றி சில கருத்துக்கள், வரும்முன் காப்போம் என்பதற்கு ஏற்ப:

1.வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியூட்டி, உடல் சூட்டைத்தனித்து ஆரோக்கியமாக வைக்கும்.
2. வியர்வையின் துர் நாற்றத்தை குறைக்கும்.
3. வெய்யிலின் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாயிற்று வலி, வியர்கூரு, கண் எரிச்சல், நீர் கடுப்பு போன்ற உபாதைகளில் இருந்து தங்களை பாதுகத்துக்கொள்ள உதவுகிறது.
சில மணித்துளிகளில் செய்யக்கூடிய வெள்ளரிக்காய் பச்சடி ஓர் எளிய அருமையான சுவையுடையது, சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக உட்கொள்ளலாம்.
வெள்ளரிக்காயை பச்சையாக துருவி செய்வதால் எல்லோரும் எளிதாக சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, சாதம் என எல்லா வகையோடும் இணையாக்கலாம்.

12946927_1070321879676088_154141302_o

செய்முறை:
வெள்ளரிக்காய்-100கிராம்
காரட் துருவியது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு=1/4 தேக்கரண்டி
கெட்டி தயிர்-2 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 தேக்கரண்டி
கடுகு-1/4 தேக்கரண்டி
பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
1. வெள்ளரிக்காயைக்கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
2.காரட் துருவிக்கொள்ளவும்.

12935432_1070321919676084_1050986769_n

3.துருவிய இரண்டையும் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும்.

12935383_1070321899676086_885384448_n

4..எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதன் மேலே கொட்டவும்.

12939168_1070321896342753_1084189941_n

5. கலக்கி பரிமாறவும்.


 

நெல்லிக்காய் பொடி :

வரும் முன் காப்போம் என்பது நம் முன்னோர்களின் வாக்கு, நம் உடம்பை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள இயற்கை முறைகளை கவனமாக நம் உணவில் பயன்படுத்தி காத்துவந்தனர்.நெல்லிக்கனியின் அற்புதம் நாம் அறிந்ததே புராணங்களிலும் இது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
.
நெல்லிக்காய் பல நோய்களுக்கு வைத்தியம் வழங்குகிறது, எனவே அது பரவலாக ஆயுர்வேத சிகிச்சைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் ‘ சி’மிகவும் அதிகமாகவும் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் போன்ற பல கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
அதன் அதிக வைட்டமின் ‘சி’ உள்ளடக்கம் காரணமாக உணவு உறிஞ்சுதல் அதிகரிக்கிறது, வயிற்றில் அமிலம் தக்கவைத்து, கல்லீரலை வலுப்படுத்துகிறது , மூளை மற்றும் மன செயல்பாடுகளில் ஊட்டம் அதிகமாகிறது , நுரையீரலை உறுதிப்படுத்துகிறது, சிறுநீர் அமைப்பை சீராக்குகிறது, தோல் சுகாதாரம் அதிகரிக்கிறது , முடி வளர்வதில் பெரிதும் உதவுகிறது, கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது. இவ்வளவு மருத்துவ குணம் படைத்த நெல்லிக்காய் நமக்கு எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு இயலாத ஒன்று, மேலும் இதை பக்குவமாக காயவைத்து பல நாட்களுக்கு பயன்படுத்தலாம், அஜீரணம், வாய் துர் நாற்றம் போன்றவற்றிற்கு மருந்தாக உபயோகிக்கலாம்.

11823901_933386316702979_1088613211_n
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்-100 கிராம்
மிளகு-5
சீரகம்-1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-4
உப்பு-1 தேக்கரண்டி
செய்முறை:
நெல்லிக்காயை நன்கு கழுவி துடைத்து விதை நீக்கி வைத்துக்கொள்ளவும்.
மேல் கூறியுள்ள இதர பொருட்களை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

11798440_933386390036305_1050670139_n
உடனே சாப்பிட, சிறிது புளிக்காத தயிர் சேர்த்து பரிமாறவும் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த கலவையை உலர்த்தி கொள்கலனில் வைத்து உபயோகிக்கலாம்.
இதை பக்குவமாக காயவைத்து பல நாட்களுக்கு பயன்படுத்தலாம், அஜீரணம் வாய் துர்நாற்றம், சோர்வு போன்றவற்றிற்கு மருந்தாக உபயோகிக்கலாம்.

 

பிரண்டை குழம்பு / Pirandai Kuzhambu: For English please click:   http://wp.me/p1o34t-11Q


 

பிரண்டை குழம்பு :
அற்புத மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டை, எளிதாக எல்லா இடத்திலும் வளரக்கூடியது. வீட்டில் தொட்டிகளில் கூட வளர்க்கலாம்.

1.இது வயிற்றுக்கோளறு, சுளுக்கு.போன்றவற்றை குணப்படுத்தும்.

2.இரைப்பை புண்ணுக்கு ஒரு சாத்தியமான சிகிச்சையாக கருதப்படுகிறது.

3.உடல் எடையை குறைக்க உதவும்.

4.எலும்பு முறிவை குணப்படுத்தும் ஒரு அற்புத மூலிகை.

வரும் முன் காப்போம் என்ற கருத்துக்கு ஏற்ப வாரம் ஒருமுறையாவது இந்த மூலிகையை நம் உணவில் சேர்த்துக்கொள்வோம்.

Pirandai Kuzhambu

தேவையான பொருட்கள்:

பிரண்டை – 150 கிராம்
வெங்காயம் – 7
பூண்டு – 3
சோம்பு -1/2 தே.க
சீரகம் -1/2 தே.க
மல்லி -1 1/2 தே.க
மிளகு-1தே.க
வெந்தயம்-1 தே.க                                                                                                                               வர மிளகாய்-5
கடலைப்பருப்பு- 1 தே.க
தேங்காய்- 1 மேஜைக்கரண்டி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் -1 தே.க

தாளிக்க :
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தே .க
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை:
பிரண்டை சுத்தம் செய்யும் முறை

12540256_1020477311327212_49000993_n
கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, பிண்டையின் ஓரங்களை கத்தி கொண்டு எடுக்கவும். முருங்கக்காய் உரித்து எடுப்பது போல் எடுக்கவும்.
பின் நன்கு நீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
1. பிரண்டையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும்.

12571204_1020477207993889_1724708976_n
நன்கு நிறம் மாறி வந்ததும் எடுத்து ஆற விடவும்.
2. மற்றுமொரு பானில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மேல் கூறியுள்ள இதர பொருட்களை வறுத்தெடுக்கவும்.

12540225_1020477177993892_1488093077_n
3. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து உப்பு, புளியுடன் விழுதாக அரைத்தெடுக்கவும்.
4. மீதமுள்ள எண்ணெயில் தாளிதம் செய்து அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு, சிறிது வெல்லம் , தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

12546243_1020477157993894_841978000_o
6. சத்தான பிரண்டைக் குழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.


மிளகு பொடி :

For English please click:      http://wp.me/p1o34t-hV

பசியைத்தூண்டும் மிளகுபொடி தோற்றம்- செட்டிநாடு.

மிளகு பொடி சூடான சாதத்தில் நெய்யுடன் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இது சுவைமட்டுமல்லாது ஜீரண சக்தியைத்தூண்டும் குணமுடையது, மாந்தம், அஜீரணம், பசியின்மை போன்ற கோளாறுகளில் இருந்து விடுபடலாம். தொடர்ந்து உட்கொள்ள உடல் எடை குறைக்க உதவும்.  இது விருந்துகளில் பருப்பு நெய்க்கு மாறுதலாக பரிமாறப்படும். மேலும் இந்த பொடியை பல விதமாக பயன்படுத்தலாம் உதாரணமாக,
கத்திரிக்காய், அவரைக்காய் , போன்ற பொரியல்களிலும்லும் தேங்காய்க்கு பதிலாக தூவி கிளறிவிடலாம், சுவையும் மனமும் அசத்தலாகதலாக இருக்கும்.
கூட்டு வகையிலும் சேர்க்கலாம் இது கெட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

Mizhagupodi

தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கோப்பை
பச்சரிசி-1 தே .க
மிளகு -1 தே .க
சீரகம்- 1/2 தே .க
உப்பு-1/2 தே .க
மோர் மிளகாய்- 4
செய்முறை:
மேல் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே, பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.

DSC08009

ஆறியதும் நைசாக அரைத்து போடி செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் சமயத்தில் பயன்படுதிக்கொள்ளலாம். இது 3 லிருந்து 4 மாதம் வரை பயன் படுத்தலாம்.


 

முள்ளு முருங்கை / கல்யாண முருங்கை தோசை:

பெயர் காரணம்- .இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று.

முள்ளு முருங்கை இலை(கல்யாண முருங்கை) மருத்துவ குணம் நிறைந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி கொண்டது.
இது ஒரு இயற்கை மலமிளக்கி. வயிற்று வலியை குறைத்து சரிசெய்யும். இந்த மரத்தின் பட்டை கூட பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

முள்ளு முருங்கை / கல்யாண முருங்கை தோசை:
முள்ளு முருங்கை / கல்யாண முருங்கை தோசை

 

முள்ளு முருங்கை தோசை சுவையாகவும், மிருதுவாகவும் நல்ல பச்சை நிறமாக இருக்கும்.
செய்யத்தேவையான பொருட்களும் குறைவும் எளிதாகவும், உடனடியாகவும் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி-1 கோப்பை 225 கிராம்
முள்ளு முருங்கை இலை -10, 12

12714010_1034797399895203_1700617937_n
சிறிதாக நறுக்கிய வெங்காயம் -1/2 கோப்பை                                                     மிளகு -3/4 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
செய்முறை:                                                                                                                கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

12746526_1034797363228540_15805734_n
அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, கீரை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும், மாவு தயார். இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

12722193_1034797226561887_1979883122_o
தோசைக்கல்லை காயவைத்து தோசை வார்ப்பது போல் சிறிது எண்ணெய் விட்டு வர்த்தேடுக்கவும்.

12736096_1034797123228564_783773360_n
சத்தான, சுவையான முல்லுமுருங்கை தோசை ரெடி.